உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராஜிவ்காந்தி 34ம் நினைவு தினம் கிழக்கு மாவட்ட காங்., அனுசரிப்பு

ராஜிவ்காந்தி 34ம் நினைவு தினம் கிழக்கு மாவட்ட காங்., அனுசரிப்பு

நாமக்கல், இந்தியாவின் இளம் தலைவராகவும், பிரதமராகவும், அகில இந்திய காங்., தலைவராகவும் பதவி வகித்தவர் ராஜிவ்காந்தி. இவர், 1991 மே, 21ல் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, ஆண்டுதோறும், அக்கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 34ம் ஆண்டு நினைவு தினம், நாடு முழுவதும், காங்., கட்சியினர் அனுசரித்தனர். கிழக்கு மாவட்டம் மற்றும் மாநகர காங்., சார்பில், மணிக்கூண்டு அருகே நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ராஜிவ்காந்தி படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில், காமராஜர் தொண்டர்கள் அமைப்பாளர் சோழாஸ் ஏகாம்பரம் சார்பில், காலை உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ