உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர்; மக்கள் அதிர்ச்சி; அதிகாரிகள் அலட்சியம்

சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர்; மக்கள் அதிர்ச்சி; அதிகாரிகள் அலட்சியம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் சாயக்கழிவால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழாயை திறந்தால் சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர் வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு பகுதிகளில் ஏராளமான வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நேற்று முன்தினம், இப்பகுதியில் தண்ணீர் பிடிக்க குழாயை திறந்தபோது சிவப்பு, ரோஸ் நிறத்தில் தண்ணீர் வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, பள்ளிப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், நீரை பரிசோதனை செய்ய எடுத்து சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில், நேற்று ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர் வந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆனால், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல், ஆய்வு என்ற பெயரில் அலட்சியம் காட்டி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !