ஓடப்பள்ளி தடுப்பணையில் செந்நிறத்தில் சீறிப்பாய்ந்த நீர்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி தடுப்பணையில் நுரை பொங்க தண்ணீர் செந்நிறத்தில் சீறிப்பாய்ந்து செல்கிறது.கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் செந்நிறமாக தண்ணீர் வருகிறது. பள்ளிப்பாளையம் பகுதியில் ஆற்றின் இருகரையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது.பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை வழியாக, நுரை பொங்க தண்ணீர் செந்நிறத்தில் சீறிப்பாய்ந்து செல்கிறது. தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதை, தடுப்பணை பாலத்தில் செல்வோர் பார்த்து ரசித்து, மொபைல் போனில், 'செல்பி' எடுத்து செல்கின்றனர்.