உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இடமாறுதல் கவுன்சிலிங்: 47 பேருக்கு உத்தரவு

இடமாறுதல் கவுன்சிலிங்: 47 பேருக்கு உத்தரவு

நாமக்கல்,நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும், 98 பட்டதாரி ஆசியர்கள், உபரியாக கண்டறியப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டது. இதில், சீனியாரிட்டி அடிப்படையில், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதல் அளிக்கப்பட்டது-.பணி நிரவல் கலந்தாய்வு மூலம், 47 பட்டதாரி ஆசிரியர்கள், வெவ்வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதமுள்ள, 51 ஆசிரியர்கள், அவர்கள் தற்போது பணியாற்றி வரும் பள்ளிகளிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக, மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அப்துல்வகாப் நியமிக்கப்பட்டார். அவர், நேற்று முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ