உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையம் பகுதியில் கொடி கம்பங்களை அகற்ற கெடு

பள்ளிப்பாளையம் பகுதியில் கொடி கம்பங்களை அகற்ற கெடு

பள்ளிப்பாளையம்:''பொது இடங்களில் உள்ள அனைத்துக்கட்சி கொடி கம்பங்களை, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்,'' என, அனைத்து கட்சி கூட்டத்தில், பள்ளிப்பாளையம் நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதற்கான, அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம், நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் தயாளன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பா.ஜ.,-மா.கம்யூ.,-இ.கம்யூ.,-கொ.ம.தே.க.,-தே.மு.தி.க.,-த.வெ.க.,-பா.ம.க., லோக் ஜன சக்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதுகுறித்து, மாநகராட்சிகமிஷனர் தயாளன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை, கட்சியினர், 15 நாட்களுக்குள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், நகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்படும். இதனால் ஏற்படும் அனைத்து செலவுகளையும், அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ