உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் அகற்றம்

அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் அகற்றம்

பள்ளிப்பாளையம், டிச. 8-சேலம், நாமக்கல், சங்ககிரி, திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பள்ளிப்பாளையம் வழியாக ஏராளமான பஸ்கள் ஈரோட்டிற்கு சென்று வருகின்றன. இதில், ஒரு சில தவிர, பெரும்பாலான பஸ்களில் அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும், 'ஏர் ஹாரன்'களை பயன்படுத்தி, மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்தன. இதையடுத்து, நேற்று காலை, பள்ளிப்பாளையம் பாலத்தில் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார், மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த, 'ஏர் ஹாரன்'களை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை