மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற 3 பேர் கைது
26-Jun-2025
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள், நேற்று காலை, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில், 50,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினமும், 200 முதல், 300 வெளிநோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 60க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு, 'ஸ்கேன்' செய்வதற்கு ரேடியாலஜிஸ்ட் (கதிரியக்க மருத்துவர்) இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தற்காலிக ரேடியாலஜிஸ்ட் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26-Jun-2025