பண்டி, கொட்டா சான்றிதழ் தடையின்றி வழங்க கோரிக்கை
நாமக்கல்: ண்டி மற்றும் கொட்டா சங்கம், ஒட்டர் முன்னேற்ற முன்னணி சார்பில், பொதுக்கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் மாவட்ட பண்டி கொட்டா சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜெயபாலன், ஒட்டர் முன்னேற்ற முன்னணி நிறுவனர் லெனின், ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை பல்கலை மானுடவியல் துறை, கல்வேலை செய்பவர்-களை பண்டி இனத்தவர் என்றும், மண் வேலை செய்பவர்களை கொட்டா இனத்தவர் என்றும் ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால், பண்டி, கொட்டா சான்-றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். அதனால், தங்கு தடையின்றி சான்றிதழ் வழங்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும். கல்குவாரிகள் டெண்டர் விடும்போது, கல் உடைக்கும் எங்கள் இன மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, கல் குவாரிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க துணைத்தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் பெரியசாமி, செய-லாளர் ஞானதண்டாயுதபாணி, மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்-பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.