விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க கோரிக்கை
நாமக்கல், 'தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, 2025-26ம் நிதியாண்டில், விவசாயிகளுக்கு, விவசாய பயன்பாட்டிற்காக, 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, 4 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை இலவச மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், தமிழக விவசாயிகள் பதிவு செய்துவிட்டு, மின் இணைப்புக்காக காத்துக்கொண்டு உள்ளனர். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், உடனடியாக இலவச மின் இணைப்பை விவசாயிகள் பயன்பாட்டிற்கு விரைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்,