உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலைச்-செல்வி, 70. இவர், ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள திருமுருகன் நகரில் தன், இரண்டு மகள்க-ளுடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்து விட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 80 அடி ஆழ கிணற்றில், 15 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது.இதனால் உள்ளே விழுந்த கலைச்செல்விக்கு காயம் ஏற்பட வில்லை. நீச்சல் தெரிந்ததால் தத்தளித்துக்கொண்டிருந்தார்.தகவலறிந்த ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கலைச்செல்வியை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை