உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தீர்மானம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தீர்மானம்

நாமக்கல்:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய தேர்தல், நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. தேர்தல் அலுவலர்களாக, பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் சுந்தரம், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வராஜூ ஆகியோர் செயல்பட்டனர். நாமக்கல் ஒன்றிய ஆசிரியர்கள் பங்கேற்று, ஒன்றிய பொறுப்பாளர்களாக, 52 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தனர்.தொடர்ந்து, ஒன்றிய தலைவர் ஜீவாஜாய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யும் மூவர் குழுவின் பரிந்துரை அறிக்கை வரும் வரை காலதாமதப்படுத்தாமல், நிதி மோசடி திட்டமான புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம், மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை நிராகரித்து விட்டு, தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை