உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நலவாரிய உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்க தீர்மானம்

நலவாரிய உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்க தீர்மானம்

நலவாரிய உறுப்பினர்களுக்குபோனஸ் வழங்க தீர்மானம்நாமக்கல், அக். 24-தமிழ்நாடு மக்கள் நல பொது சேவை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு, மாநில சங்கங்கள், மண்டலம் மற்றும் மாவட்ட சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் பாலுசாமி, பொருளாளர் ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் அந்தோனிஜெனிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில், தொழிலாளர் நல வாரியத்தில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். புதிய பதிவு, கேட்பு மனு, ரினிவல் ஆகாத மற்றும் ஆன்லைன் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும். உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸாக, 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ