கட்டளை மேட்டு பாசன வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைப்பு
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம், பழைய ஜெயங்கொண்டம் பஞ்சப்பட்டி சாலை, கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின், இடது பக்கத்தில் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் மைலம்பட்டி வழி பழையஜெயங்கொண்டம் பஞ்சப்பட்டி சாலை கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே, கட்டப்பட்ட பாலத்தின் அணுகு சாலை இடது பக்கத்தில் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த இடம் பெரிய பள்ளமாக மாறியது. இது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து நெடுஞ்சாலை துறை, கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் கர்ணன், கிருஷ்ணராயபுரம் உட்கோட்ட உதவி பொறியாளர் அசாரூதீன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பாலத்தின் இடது புறத்து சாலையில் மக்கள் நலன் கருதி, தற்காலிகமாக மண் நிரப்பப்பட்டு, மண் அரிமானம் சரி செய்யும் பணி நடந்தது.