வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்-துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவ-லக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகாந்த், பொரு-ளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்-டத்தில், கடந்த, ஓராண்டில் எண்ணற்ற பணிமாறுதல்களை வழங்-கிய மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் வழங்க வேண்டும்.கர்ப்பிணிகள், பாலுாட் டும் தாய்மார்களான அலுவலர்களுக்கு, அருகில் பணியிட மாறுதல் வழங்காமல், தொலைதுாரத்தில் மாறுதல் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தபோதும் எந்த-வித நடவடிக்கையும் இல்லாததால், நேற்று மாலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை பணியை புறக்கணித்து வெளியேறினர். தொடர்ந்து, அதற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் ராணி நன்றி கூறினார்.