வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
நாமக்கல்:நாமக்கல்லில், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் பங்கேற்றார். கூட்டத்தில், மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களை பணி மாறுதல் செய்யவும் மற்றும் சிலரை பணி மாறுதல் என்ற பெயரில் ஒரே அலுவகத்தில் பணி மாறுதல் செய்து வருகின்றனர்.பணி மாறுதல் விபரங்கள் எடுக்கும்போது, தற்போது பணியில் சேர்ந்த நாட்களை கணக்கில் எடுத்து கொள்கின்றனர்.எனவே, இதுபோன்ற பணி மாறுதலால், தொடர்ந்து ஒரே இடத்தில், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகின்றனர்.ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து அவர்களே பணி புரிவதால் மற்ற அலுவலர்கள் அவர்கள் சொந்த ஊரில் பணிபுரியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.எனவே, ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும். அனைவரும் அனைத்து பணியிடங்களிலும் பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் மனோஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.