பழங்குடி மக்களின் அடிப்படை தேவைக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் மதிவேந்தன், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார். அதை தொடர்ந்து அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், பழங்குடியின மக்கள் வசிக்கும் ஊனந்தாங்கல், பெரப்பஞ்சோலை, முள்ளுக்குறிச்சி, மூலக்குறிச்சி, கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில், அரசின் முடிவுற்ற திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, மக்களின் கோரிக்கைகளை, துறை செயலாளர் மற்றும் பழங்குடியின நலத்துறை இயக்குனர் கேட்டறிந்தார். இதேபோல், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பழங்குடியின மக்களை சந்திக்க உள்ளோம். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாலை, சுற்றுச்சுவர், அணுகு சாலை, தடுப்பு சுவர், மொபைல் போன் டவர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு அதிகம் பேர் மனு கொடுத்துள்ளனர். தமிழக அரசின், தொல்குடி திட்டத்தில், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர், 138 பேர் மேல்நிலை கல்வி முடித்து, என்.ஐ.டி.,-ஐ.ஐ.எம்., போன்ற தேசிய அளவில் புகழ்பெற்ற அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.