கிராமங்களில் நுாற்றாண்டு விழா கொண்டாட ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு
நாமகிரிப்பேட்டை, 'ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம்' என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா, நேற்று முன்தினம் விஜயதசமி நாளில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன் குறிச்சியில் இதற்கான விழா நடந்தது.தொடர்ந்து கிராமங்கள் தோறும் நுாற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். கார்கூடல்பட்டி, மெட்டாலா, மங்களபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விழா நடத்த நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.முக்கியமாக சுயசார்பு, சுற்றுச்சூழல், தன்நாட்டின் பெருமை உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு இந்த விழாவை நடத்த உள்ளனர். கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் குறைவாக இருந்தாலும், பா.ஜ., நிர்வாகிகள் மூலம் முழு சீருடையில் கலந்துகொண்டு விழாவை நடத்த வேண்டும் என்ற முன்னேற்பாடுடன் நாமகிரிப்பேட்டையில் இப்பணி நடந்து வருகிறது.