மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வாலாஜாபாத்தில் பேரணி
07-Oct-2024
ப.வேலுார்: -ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்-னிட்டு, தேசத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ்., தொண்-டர்கள் சார்பில், சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். அதன்படி, ப.வேலுாரில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் பேரணி, நேற்று நடந்தது. சிவா தியேட்டர் கார்னரில் இருந்து ஆர்.எஸ்.எஸ்., ஊர்-வலம், நேற்று மாலை, 4:15 மணிக்கு தொடங்கியது. நன்செய் இடையாறு பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.ஊர்வலம், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலை, சிவா தியேட்டர் கார்னரில் இருந்து சந்தை பிரதான, பள்ளி சாலை, திரு-வள்ளுவர் சாலை நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வல மேடையை வந்தடைந்தது. 400க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக மாநில தலைவர் குமாரசாமி, நாமக்கல் மாவட்ட தலைவர் ராஜன், பொருளாளர் கார்த்திகேயன், நாமக்கல், சேலம், ஈரோடு கோட்ட தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Oct-2024