உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக வதந்திபொதுமக்கள் உண்டு பயன்பெற அழைப்பு

தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக வதந்திபொதுமக்கள் உண்டு பயன்பெற அழைப்பு

நாமக்கல்:'தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக பரப்பப்படும் வதந்தியை நம்பாமல், பொதுமக்கள் உண்டு பயன்பெறலாம்' என, நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், தர்பூசணி பழப்பயிர், 1,988 ஏக்கர் பரப்ப ளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தர்பூசணி பழப்பயிர் மகசூல், ஏக்கருக்கு சராசரியாக, 8 முதல், 10 மெட்ரிக் டன் வீதம், ஐந்து லட்சத்து, 56,221 மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது. பொதுவாக தர்பூசணி, டிச.,-ஜன.,-பிப்., மாதங்களில் விதைக்கப்பட்டு, கோடைகாலமான மார்ச், ஏப்., மே மாதங்களில் அறுவடைக்கு வரும். கோடையில், சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதால், கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. மேலும், இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணுாட்ட சத்துகளும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. இத்தகைய சத்துக்கள் நிறைந்த தர்பூசணியை கலப்படம் செய்வதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பாமல், பொதுமக்கள் உண்டு பயன்பெறலாம். இதன் மூலம், விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்கப்பெற்று, பயன்பெறுவதோடு, முதியவர்களின் உடல்நலன் பேணி காக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ