உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

நாமக்கல் :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை, 10,000 ரூபாயாக உயர்த்தி, ஊராட்சி மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தைத், தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு காலமுறை ஊதியம், 15,000 ரூபாய் வழங்க வேண்டும்.ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மாவட்ட செயலாளர் பொன்னுவேல், பொருளாளர் துரைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட, 400-க்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்துகொண்டனர். இதனால் கிராம பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணி, குடிநீர் வினியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை