உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்

துாய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்

நாமக்கல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் என, 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் இடையே பணி நேரம் குறித்து பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த, 28ல் துாய்மை பணியாளர்கள், 88 பேரை ஒப்பந்த நிறுவனம் திடீரென பணிநீக்கம் செய்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம், மேலும், 33 துாய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட, 121 துாய்மை பணியாளர்களும், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து, நேற்று, 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ