உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு

ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு

நாமக்கல்: நாமக்கல்லில், நீட் பயிற்சி அளித்த, ஸ்பைரோ நீட் பயிற்சி நிறுவனம், தங்களது ஸ்பைரோ பிரைம் பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளியை திருச்செங்கோடு சாலையில், எர்ணாபுரத்தில் சி.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி பின்புறம் நடத்தி வருகிறது.பள்ளியில் மாணவர்கள் பாடங்களை கற்பது மட்டுமின்றி, திறன்களை வளர்க்கும் விதமாக சிலம்பம், பெயின்டிங், யோகா, டான்ஸ் மற்றும் அபாகஸ் கிளாசஸ், பரதநாட்டியம், பில்லியர்ட்ஸ் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. பள்ளியில் தரமான அறிவியல் ஆய்வகம், கணித ஆய்வகம் ரோபோடிக்ஸ் ஆய்வகம், ஆங்கில ஆய்வகம், ராக்கெட் சயின்ஸ் ஆய்வகம் போன்றவை சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி ஹாஸ்டல் வசதி உண்டு. பள்ளியில், 2025ம் கல்வியாண்டில் சேருவதற்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வரும் டிசம்பர் 1 காலை, 10:00 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது. ஸ்காலர்ஷிப் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், 73388 84137, 91765 42542 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு, தங்களுடைய பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு பள்ளியின் இயக்குனர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ