கண்டிப்புதுார் அரசு பள்ளியில் பள்ளி மேலாண் குழு கூட்டம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கண்டிப்புதுார் பகுதியில் செயல்-பட்டு வரும் அரசு துவக்க பள்ளியில், நேற்று மாலை, பள்ளி மேலாண்மை குழு கூட்டம், தலைவர் மோனிஷா தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர்(பொ) புவனேஸ்வரி வரவேற்றார்.கூட்டத்தில், மாணவ, மாணவியர் இடை நிற்றலை தவிர்த்து, அனைவரும் பள்ளியில் சேர்த்து கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். மணற்கேனி செயலியை, அனைத்து பெற்றோர்களும் தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து வகுப்பிற்கேற்ற பாடம் சார்ந்த காணொலிகளை தங்களது குழந்தைகளுக்கு பயன்படுத்திக்-கொள்ள வேண்டும்.பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டட கட்டுமானம் தர-மற்ற முறையில் உள்ளதால், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்-காததை வருத்தத்துடன் பதிவு செய்கிறது. கட்டடத்தை, துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.