உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மொபட் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவி படுகாயம்

மொபட் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவி படுகாயம்

நாமக்கல்: நாமக்கல், திருமலைசாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. அவரது மனைவி பூமதி, 30. தம்பதியருக்கு, தன்யாஸ்ரீ, 11, என்ற மகள் உள்ளார். அவர், நல்லிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அரையாண்டு தேர்வு எழுத சென்ற மகளை, தாயார் பூமதி எக்ஸல் சூப்பர் மொபட்டில் அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு வந்துள்ளார். மதியம், 2:00 மணிக்கு நல்லிபாளையம் பகுதியில் வந்து, சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு வந்த ஆம்னி வேன், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில், இருவரும் துாக்கி விசப்பட்டனர். அதில் பூமதி காயமின்றி தப்பினார். மாணவி தன்யாஸ்ரீ படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி