உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அறிவியல் நாடக திருவிழா மாவட்ட அளவில் போட்டி

அறிவியல் நாடக திருவிழா மாவட்ட அளவில் போட்டி

நாமக்கல், நாமக்கல்லில், மாவட்ட அளவிலான அறிவியல் நாடக திருவிழா போட்டி நடந்தது. அதில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், தென்னிந்திய அறிவியல் நாடக திருவிழா போட்டியானது, மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொள்ள முதன்மை கல்வி அலுவலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே, பள்ளிகள் அளவிலும், வட்டார அளவிலும் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், மாவட்ட அளவிலான போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது.இதில் வட்டார அளவில் முதலிடம் பெற்ற குழுக்கள் மட்டுமே பங்கேற்றன. வரும், 30ல் மாநில அளவிலான போட்டி நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி