மேலும் செய்திகள்
பைக் திருடியவருக்கு போலீஸ் வலைவீச்சு
11-May-2025
இருதரப்பு மோதல்
14-May-2025
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. மேதரமாதேவியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சபீர், 23, அதே பகுதியை சேர்ந்த பரமசிவம், 55, ஆகியோர், ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சபீர், அரிவாளால் பரமசிவத்தை வெட்டினார். இதில், படுகாயமடைந்த பரமசிவத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, சேந்தமங்கலம் எஸ்.ஐ., தமிழ்குமரன், சபீரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
11-May-2025
14-May-2025