ஆடிப்பெருக்கு விழா பாதுகாப்பு அவசியம்
பள்ளிப்பாளையம், ஆடிப்பெருக்கு நாளான்று, பள்ளிப்பாளையம் பகுதியில் ஆற்றில் குளிக்க, வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நள்ளிரவு முதலே கூட்டம், கூட்டமாக வருவர். அவர்களுக்கு, ஆற்றில் ஆபத்தான இடம், ஆழமான பகுதி எது? என, தெரியாது. இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, ஆற்றுப்பகுதியில் ஆபத்தான இடங்களில் அறிவிப்பு பலகை, மின் விளக்கு, பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.