வடிகால் அடைப்பால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை சக்தி நகர் குடியிருப்புக்கு செல்லும் வடிகாலில், மண்னை கொட்டி அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், கழிவுநீர் சீராக செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:வெப்படை சக்திநகர் பகுதியில் செல்லும் வடிகால் வழியாக, அப்பகுதி குடியிருப்பு கழிவுநீர் செல்கிறது. இந்த வடிகாலின் குறிப்பிட்ட பகுதியை, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மண்ணை கொட்டி அடைத்துவிட்டார். இதனால், வடிகாலில் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.அருகில் அங்கான்வாடி மையம் செயல்படுகிறது. குழந்தைகள் இந்த வடிகால் ஓரத்தில் தான் செல்கின்றனர். தவறி விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து எலந்தகுட்டை பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் நடப்பதற்கு முன், வடிகால் அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.