உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி ஆற்றில் பாசனத்துக்கு செல்லும் நீரில் சாயக்கழிவு கலப்பதால் அதிர்ச்சி

காவிரி ஆற்றில் பாசனத்துக்கு செல்லும் நீரில் சாயக்கழிவு கலப்பதால் அதிர்ச்சி

பள்ளிப்பாளையம், ஒன்பதாம்படி பகுதியில் சாயக்கழிவு காவிரி ஆற்றில் கலப்பதால், பாசனத்துக்கு செல்லும் தண்ணீர் மாசடைகிறது.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. விதிமுறைகளை மீறி, ஆலைகளில் இருந்து சாயக்கழிவு நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து, குடிக்க பயன்படுத்தும் மக்களுக்கு கேன்சர், கிட்னி பாதிப்பு, தோல் அலர்ஜி உள்ளிட்ட உடல் சார்ந்த பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இது குறித்து புகார் அளிக்க சென்றால், குமாரபாளையம் மாசுகட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் பெயரளவுக்கு, சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பர். சில நாட்கள் கழித்து நடவடிக்கை எடுத்த சாய ஆலைகள் மீண்டும் செயல்படும்.இந்நிலையில், நேற்று அதிகாலை ஒன்பதாம்படி பகுதியில் செல்லும் வடிகாலில், நுரையுடன் சாயக்கழிவுநீர் சென்றது. இது நேரடியாக ஆற்றில் கலந்தது. தற்போது பாசனத்துக்கு ஆற்றில் தண்ணீர் செல்கிறது. சாயக்கழிவுநீர் ஆற்று தண்ணீரில் கலப்பதால், பாசனத்துக்கு செல்லும் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. எனவே, சாயக்கழிவுநீர் எந்த சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது என, கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி