உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் கல்லுாரியில் திறன் மேம்பாடு வகுப்பு

குமாரபாளையம் கல்லுாரியில் திறன் மேம்பாடு வகுப்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக இளங்கலை தமிழ், ஆங்கிலம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு, 'கிராபிக் டிசைன்', 'மல்டி மீடியா' பயிற்சி வகுப்பு துவக்க விழா, கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. அவர், கிராபிக் டிசைன் மற்றும் மல்டி மீடியா துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது என, பேசினார். பெங்களூரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி சங்கர், இந்த பயிற்சியை வழங்கினார். வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, ஆங்கிலத்துறை தலைவர் பத்மாவதி, பேராசிரியர்கள் சண்முகாதேவி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை