பாவை கல்வி நிறுவனங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி
நாமக்கல், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு பள்ளி' திட்டத்தில், பாவை கல்வி நிறுவனங்களில், நாமக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், ''இந்த நிகழ்ச்சி மூலம் உங்கள் திறன்கள் மேம்படுவதோடு, உயர் கல்விக்கான சிறந்த வழிகாட்டுதலும் கிடைக்கும். இதேபோல், நான் முதல்வன்; எண்ணும் எழுத்தும்; இல்லம் தேடி கல்வி; புதுமைப்பெண்; தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மாணவ, மாணவியராகிய உங்களின் நலனுக்கு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது,'' என்றார்.தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தாளாளர் மங்கை நடராஜன் நன்றி தெரிவித்தார்.பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் ராமசாமி, வழக்கறிஞர் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, முதன்மையர் ஜெயலெட்சுமி, பாவை பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரேம்குமார், பாவை புதுமை படைப்பாக்க மைய பொறுப்பாளர் கமலாகிருஷ்ணமூர்த்தி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அரசு கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.