சிறு, குறு தொழில் அமைப்பின் தொழில் நுட்ப பயிற்சி முகாம்
நாமக்கல், அகில இந்திய குறு, சிறு தொழில் அமைப்பான, 'லகு உத்யோக் பாரதி'- திருச்செங்கோடு யூனிட் சார்பில், தொழில் நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடந்தது. நித்ரா ஆப்ஸ் சி.இ.ஓ., கோகுல்நாத் பொன்னுசாமி தலைமை வகித்து, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு, டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் பங்களிப்பு குறித்து விளக்கி பேசினார்.'லகு உத்யோக் பாரதி' அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், இந்த அமைப்பில் இணைந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி, லகு உத்யோக் பாரதி தமிழக தலைவர் செழியன், துணை தலைவர் இளங்கோ, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, திருச்செங்கோடு யூனிட் தலைவராக நாகராஜன், செயலாளராக கமலக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர். மாவட்டத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.