உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கள்ளச்சாராய தீமைகள் எஸ்.பி., விழிப்புணர்வு

கள்ளச்சாராய தீமைகள் எஸ்.பி., விழிப்புணர்வு

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் கள்ளாச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மலை கிராம பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் கள்ளச்சாராயத்தை தடுக்க, அடிக்கடி மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதோபோல், நேற்று கொல்லிமலையில் உள்ள செம்மேடு, வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகு-திகளில், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில், மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் பல்வேறு மலை கிராமங்கள், வனப்பகுதி-களில் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ளாச்சாராயம் காய்ச்சுவது குற்றம் என்பதை விளக்கும் வகையில், சோளக்காடு பகுதியில் விழிப்புணர்வு ஏற்ப-டுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை