மேலும் செய்திகள்
நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்
16-Aug-2025
மனித உரிமை ஆணையம் விசாரணை
26-Aug-2025
ப.வேலுார் :ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நேற்று நடந்தது. சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாள் அபிஷேகம் நடக்கும். அவை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. இந்த நாட்களில் கோவில்களில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்அதன்படி, நேற்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜருக்கு கைலாய வாத்தியம் முழங்க தேவாரம், திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
16-Aug-2025
26-Aug-2025