உழவரை தேடி வேளாண் திட்ட சிறப்பு முகாம்
நாமக்கல், நாமக்கல் வட்டார வேளாண் துறை சார்பில், உழவரை தேடி வேளாண் -உழவர் நலத்துறை திட்டம், காதப்பள்ளி கிராமத்தில் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்து, வேளாண்மையை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்து செல்லும் பயிர் சார்ந்த தொழில் நுட்பங்கள், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.பயிர் காப்பீடு திட்ட வேளாண் உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி, வேளாண் அலுவலர் தரணியா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பாலாஜி, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, காதப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் விபுலானந்தம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி தோட்டக்கலை அலுவலர் கணேஷ் ஆகியோர் பங்கேற்று, துறைகளில் செயல்படுத்தப்படும் மானியங்கள், ஆலோசனைகள், பயிருக்கு தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். வேளாண் அலுவலர் காஞ்சனா, உதவி வேளாண் அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.