திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைஎலச்சிபாளையம், :எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ அன்னபூரணி உடனமர் திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று, தனுர் மாத பூஜை நிறைவு பெற்று, தை பிறப்பு முதல் நாளை முன்னிட்டு, சுவாமிக்கு அதிகாலை, 5:00 மணிக்கு பாலபிஷேகம், அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பூசாரி தர்மலிங்கம், நிர்வாகிகள் செய்திருந்தனர்.