உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சனி பிரதோஷத்தையொட்டி கைலாசநாதருக்கு சிறப்பு பூஜை

சனி பிரதோஷத்தையொட்டி கைலாசநாதருக்கு சிறப்பு பூஜை

ராசிபுரம்:மார்கழி சனிப்பிரதோஷத்தையொட்டி, ராசிபுரத்தில் உள்ள வர-லாற்று சிறப்புமிக்க கைலாசநாதர் கோவிலில், நேற்று காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. சிவனுக்கு பல்வேறு வாசனை திர-வியங்கள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை நந்தி, சிவனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் நந்தி தேவனை வழிபட்டு, தொடர்ந்து சிவனை வழிபட்டனர். இதேபோல், நாமகிரிப்-பேட்டை சிவன் கோவில், சீராப்பள்ளி செவ்வந்தீஸ்வரர் கோவில், கல்குறிச்சி கற்பூரநாதீஸ்வரர் கோவில், சிங்களாந்தபுரம் திருவேஸ்வரர் கோவிலில் சிவன், நந்திக்கு சிறப்பு பூஜை நடந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ