உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாளை முதல் உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு வார்டு கூட்டம்: கலெக்டர் தகவல்

நாளை முதல் உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு வார்டு கூட்டம்: கலெக்டர் தகவல்

நாமக்கல், 'நாளை துவங்கி, 29 வரை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., களில் உள்ள அனைத்து வார்டுகளிலும், கவுன்சிலர்கள் தலைமையில், நாளை முதல், 29 வரை, சிறப்பு வார்டு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது வார்டு பகுதியில் அடிப்படை சேவைகளான குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பராமரிப்பு, பூங்காக்கள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை தெரிவித்து தீர்வு காணலாம்.மேலும், முன்னுரிமை அடிப்படையில், மூன்று கோரிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கோரிக்கைகள் முதல்வரின் இணையதளத்தில் அப்லோடு செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை