உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநில கூடைப்பந்து போட்டி: கோவை அணிக்கு முதல் பரிசு

மாநில கூடைப்பந்து போட்டி: கோவை அணிக்கு முதல் பரிசு

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, தனியார் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், கோவை அணிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா அடுத்த தனியார் கல்லுாரியில், 6ம் ஆண்டு மாநில அளவிலான விக்டர் நினைவு கூடைப்பந்து போட்டி, மூன்று நாட்கள் நடந்தது. கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடு, இப்போட்டி நடத்தப்படுகிறது. கல்லுாரி செயலாளர் டேனிஸ் பொன்னையா, முதல்வர் ஜோஸ்பின் டெய்சி ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து, 30க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர். கொல்லிமலை தாசில்தார் சரவணன், புனித சிலுவை மேல்நிலைப்பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஜேசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை வழங்கி பாராட்டினர்.மகளிர் பிரிவில் கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி முதலிடம், கோவை கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இரண்டாமிடம், கோவை கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி மூன்றாமிடம், கோவை பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லுாரி, நான்காமிடம் பெற்றன. ஆண்கள் பிரிவில், கோவை பி.எஸ்.ஜி., முதலிடம், கோவை என்.ஜி.பி., கல்லுாரி, இரண்டாமிடம், திருச்சி ஜெனிஸ் கல்லுாரி, மூன்றாமிடம்; திருநெல்வேலி சதக் அப்துல்லா கல்லுாரி, நான்காமிடம் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ