உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்

அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்

ராசிபுரம்,பேளுக்குறிச்சியில், அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பிரசாரத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்தாண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் துண்டு பிரசுரம் மக்களிடம் வழங்கினர். மேலும், தி.மு.க., ஆட்சியின் அவலங்களை, துண்டு பிரசுரங்களாக பொதுமக்கள் இடையே வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, நாமக்கல் பிரதான சாலை, ராசிபுரம் சாலை, புறவழிச்சாலை ஆகிய இடங்களுக்கு நடந்துசென்று பொதுமக்களிடம் வழங்கினர். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை