மாணவர் பேரவை தொடக்க விழா
குமாரபாளையம், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், மாணவர் பேரவை துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் கார்த்திகேயனி வரவேற்றார். அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர்(பொ) நிர்மலாதேவி, மாணவர் பேரவை உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வாழ்த்தினார். அவர், 'இலக்கை நோக்கி' என்னும் தலைப்பில், மாணவர்கள் எவ்வாறு இலக்கை நோக்கி பயணிப்பது என்பது குறித்து பேசினார். மேலும், மாணவர்கள், சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். மாணவர் பேரவை தலைவர் கல்பனா நன்றி கூறினார்.