தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
சேந்தமங்கலம், டிச. 22-சேந்தமங்கலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.இதில், 2024- 25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, எம்.பி., ராஜேஸ்குமார் தொடங்கி வைத்து ஆணைகளை வழங்கி பேசுகையில், ''இளைஞர்கள் வேலைக்கேற்ற திறனைப் பெறவும், திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்கவும், தமிழிகத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில்அறிவிக்கப்பட்டவாறு, சேந்தமங்கலம் உட்பட 10 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 111 கோடி ரூபாய் செலவில் துவங்கிட முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து உத்திரவிட்டார். இங்கு படிப்பவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பு உள்ளது,'' என்றார்.அட்மா குழுத் தலைவர் அசோக்குமார், சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் அமலாரெக்சலீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.