உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாக்கடை கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டதால் அவதி

சாக்கடை கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டதால் அவதி

ப.வேலுார்,ப.வேலுார், செட்டியார் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இதில், 16வது வார்டு குடியிருப்பு பகுதியில், இரு மாதங்களுக்கு முன், சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் விரிவாக்க பணி தொடங்கியது. இதில், ஒரு பகுதியில் மட்டுமே சாக்கடை அமைக்கும் பணி முடிந்துள்ளது. மற்றொரு பகுதி, எதிர்புறத்தில் தற்போது வரை பணி நிறைவடையாமல் உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீட்டின் முன்பு சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும், கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளது.இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதால் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் பலமுறை இதுகுறித்து தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சாக்கடை அமைக்கும் பணியை முடித்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:தி.முக.வை சேர்ந்த சிலர், தங்கள் வீட்டு முன் சாக்கடை அமைக்கும் பணிக்கு முட்டுக்கட்டை போட்டதால், பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், பள்ளி குழந்தைகள் அப்பகுதி சாலையில் செல்லும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு உரிய ஆலோசனையை, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு வழங்கி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !