மேலும் செய்திகள்
சேதமடைந்துள்ள பயணியர் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா
25-Jun-2025
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்-ராசிபுரம் நெடுஞ்சாலை, அரசு கலைக்கல்லுாரி அடுத்து கணவாய்மேடு பஸ் ஸ்டாப் உள்ளது. தற்போது, மோகனுார் முதல் ராசிபுரம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது, கணவாய் மேடு பகுதியிலும் ரோடு விரிவாக்க பணி நடந்தது. அங்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிழற்கூடம், தற்போது மிகவும் மேடான பகுதிக்கு சென்று விட்டது.இதனால், அப்பகுதி மக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல், வெயில், மழைக்காலங்களில் சாலையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் அளவிற்கு நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Jun-2025