உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புயலால் பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்

புயலால் பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்

புயலால் பயிர் சேதம்கணக்கெடுப்பு துவக்கம்சேந்தமங்கலம், டிச. 11-'பெஞ்சல்' புயல் காரணமாக, கொல்லிமலையில் அதிகன மழை பெய்தது. இதனால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அடிவாரத்தில் உள்ள பொம்மசமுத்திரம், துத்திக்குளம் ஏரிகள் நிரம்பின. அதிலிருந்து வெளியேறிய உபரிநீர், சேந்தமங்கலம், துத்திக்குளம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நெல், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி வயல்களில் தேங்கியது. இதனால் சேதமடைந்த பயிர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வெள்ள சேதங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.இதில், அந்தந்த பகுதி வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறையினர், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று, மழை நீர் ‍தேங்கியதால் எந்தளவிற்கு பாதிப்பு உள்ளது என்பதை கணக்கெடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை