உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆர்.எஸ்., சாலை விரிவுபடுத்த ஆய்வு பணி துவக்கம்

ஆர்.எஸ்., சாலை விரிவுபடுத்த ஆய்வு பணி துவக்கம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில், ஆர்.எஸ்., சாலையை விரிவுபடுத்த ஆய்வு பணி நடந்தது.பள்ளிப்பாளையத்தில் இருந்து, ஆலாம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் இருந்து ஆர்.எஸ்., சாலை பிரிந்து செல்கிறது. இந்த ஆர்.எஸ்., வழியாக நேருநகர், பெரியகாடு, வசந்தநகர், காவிரி, பேப்பர் மில், ஆயக்காட்டூர், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ், லாரி, கார், டூவீலர்கள் செல்கின்றன.ஆர்.எஸ்., சாலையில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. சாலை குறுகியதாக மாறி விட்டது. இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளிப்பாளையம் பகுதியில் இது முக்கிய சாலையாக உள்ளதால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.எனவே, ஆர்.எஸ்., சாலையை விரிவுபடுத்த முதல் கட்ட பணியாக, நேற்று நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள், சாலையின் இருபுறத்திலும் ஆய்வு செய்து, சர்வே செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை