மேலும் செய்திகள்
ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்
06-Dec-2024
ராசிபுரம், ஜன. 2- ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின், புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு அதன் பதவியேற்பு விழா நடந்தது.சம்மேளன துணைத்தலைவர் சங்கர்லால் தலைமை வகித்தார். தொடர்ந்து, 3வது முறை தலைவராக பொறுப்பேற்கும் ஜெயபிரகாஷ் மற்றும் செயலாளர் ஜெகன் சேட், பொருளாளர் பாஸ்கர், துணை தலைவர்கள் வெங்கடாசலம், நந்தலால், துணை செயலாளர்கள் முருகேசன், செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர், பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு, முன்னாள் தலைவர் தாஜ்முகம்மது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், முன்னாள் எம்.பி., சின்ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
06-Dec-2024