உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல், தமிழ் புலிகள் கட்சி சார்பில், நாமக்கல் பூங்சா சாலையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை வகித்தார்.அதில், நாமக்கல் மாவட்டத்தில், பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட போலீசாரை கண்டிக்கிறோம். நாமக்கல் மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !