மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்
31-Aug-2025
நாமக்கல் :''நாமக்கல் மாவட்டத்திற்கு, கல்வி கடனாக, 2,000 மாணவ, மாணவியருக்கு, 50 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், கல்வி கடன் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 161 மாணவ, மாணவியருக்கு, 14.23 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:தமிழ்நாடு அரசு, நாமக்கல் மாவட்டத்திற்கு கல்வி கடனாக, 2,000 மாணவ, மாணவியருக்கு, 50 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய, நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து, கல்விக்கடன் முகாம்களை கிராம பஞ்., மற்றும் வட்டார அளவில், கடந்த மாதம் முதல் நடத்தி வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்வி கடன் முகாமில், 161 மாணவ, மாணவியருக்கு, 14.23 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், புதிதாக கல்விக்கடன் பெற ஏதுவாக, விண்ணப்பங்களை www.vidyalakshmi.comஇணையத்தில் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வங்கி கடனை திரும்ப செலுத்துவது காலதாமதமானால், உங்களது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.இவ்வாறு பேசினார்.மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மலர்விழி, துணை பொது மேலாளர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்
31-Aug-2025