மேலும் செய்திகள்
சின்ன வெங்காயம் நடவு பணி மும்முரம்
11-Jul-2025
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, டெய்லர் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். வெண்ணந்துார் அருகே, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் காம்ப்ளக்ஸ் பகுதியில், லேடீஸ் டெய்லர் கடை உள்ளது. கடந்த, 26ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடை பூட்டை உடைத்து, கல்லாபெட்டியில் வைத்திருந்த, 1,000 ரூபாயை திருடிச் சென்றனர்.கடை உரிமையாளரின் கணவர் பிரபு அளித்த புகார்படி, வெண்ணந்துார் போலீசார் கடை அருகில் உள்ள 'சிசிடிவி' பதிவை ஆய்வு செய்ததில், ஒருவர் நடந்து சென்றது பதிவாகி இருந்தது. விசாரணையில், ராசிபுரம் அருகே உள்ள தொப்பப்பட்டி கடைவீதியை சேர்ந்த பெரியசாமி மகன் மோகன் குமார், 27, என்பதும், டெய்லர் கடையில் பணம் திருடியது தெரியவந்தது.மோகன் குமாரை, போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
11-Jul-2025